Tamilnadu
“அம்பேத்கர் பிறந்தநாளன்று தீக்குளிக்கப் போகிறோம்” : நீதிபதிக்கு பெல் தொழிலாளிகள் எழுதிய பகிரங்க கடிதம் !
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்வதற்குரிய உத்திரவை இந்திய தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றால், சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது உருவச்சிலை முன்பு தீக்குளிக்கப் போவதாக ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி இந்திய தொழிலாளர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சுமார் 40 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இருந்தும் பெல் நிர்வாகம் செவிசாய்க்க காரணத்தினால் அவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதனை பெல் நிர்வாகமும் மதிக்கவில்லை என்றும் இதனை தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றத்தின் நடியதாகவும், உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக விசாரித்து கடந்த 2019 மார்ச் 30ம் தேதிக்குள் இந்திய தொழிலாளர் நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இந்திய தொழிலாளர் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் என்பவர் துவாக்குடி நகர திராவிட கழகத்தின் செயலாளராக உள்ள இவர், பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் இந்திய தொழிலாளர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏப்ரல் 5ம் தேதிக்குள் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டாவிட்டால் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் அன்று பெல் வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் உருவ சிலைக்கு முன்பு சுகந்திர கொடியை ஏந்தி, தீக்குளிக்கப் போவதாகவும் தான் இறந்த பிறகு நீதி கொடுக்கக்கூடிய நீதிமன்றங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கூறி கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் பெல் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னையில் உள்ள இந்திய தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருப்பவர்கள் பலர் பணி ஓய்வு பெற்று சென்று உள்ளனர். அதனால் தற்போது 850 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் மேலும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாத மத்திய, மாநில அரசையும் பெல் நிர்வாகத்தையும் கண்டித்து வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் சிலை முன்பு சுகத்திர கொடியை ஏந்தி, தீக்குளிக்கப் போவதாக ராமலிங்கம் தெரிவித்தார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!