Tamilnadu
வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விளம்பரம் தேடுவதா? - தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசை சாடிய K.S.அழகிரி!
காங்கிரஸ் கமிட்டியின் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணைத் தலைவர் உ. பலராமனின் 75வது பிறந்தநாள் விழா சென்னை தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் M. S. திரவியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே கே எஸ் அழகிரி கலந்துகொண்டு உ. பலராமனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய கே எஸ் அழகிரி, தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற செய்திகள் வந்து கொண்டிருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பாஜக அதிமுக பணபலம் அதிகாரத்தை மீறி மக்கள் பலம் வெற்றி பெறுவதாகவும் அரசாங்கத்தின் தடைகளைத் தகர்த்து வெற்றியின் சிகரங்களை அடைவதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
வேளச்சேரி தொகுதியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வாக்கு பெட்டியை தொழிலாளி எப்படி எடுத்து செல்ல முடியும். வாக்கு இயந்திரத்தில் 15 முதல் 20 வரை வாக்குகள் இருப்பதாகவும் இதுபோன்ற ஒரு குழப்பத்திற்கு தேர்தல் ஆணையம் ஏன் அனுமதித்தது வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருந்து தெளிவான பதில் வரவில்லை என்றும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை ஆணையம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடி இந்திய மக்கள் அனைவருக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மருந்துகள் கைவசம் இருப்பதாகவும் மும்பை மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள முடியாமல் வெளியேறுகிறார்கள். தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் மத்திய அரசு ஆறு கோடி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் 130 கோடி மக்கள் தடுப்பூசி போட வேண்டும் தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதில் குறைவாக செய்வதாகவும் அதனை ஏற்றுமதி செய்வதாகவும் இது விளம்பர நோக்கமா இந்திய மக்களை விட வெளி நாட்டு மக்களை நேசிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார் எந்த அடிப்படையில் பிரதமர் கொள்கை முடிவை எடுத்தார் .
தேர்தல் முடிந்த அடுத்த நாளே உர விலை அதிகரிக்கிறது. இதை விட விவசாயிகளுக்கு துரோகம் செய்ய முடியாது. விவசாயி என்று கூறிவரும் எடப்பாடி எப்படி இதனை ஏற்றார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கயிறு கொடுத்து, தற்கொலை செய்து கொள்ள கூறியிருக்கலாம்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!