Tamilnadu

நாளை தேர்தல்... தோல்வி பயத்தால் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி செய்த எடப்பாடி அரசு!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அரசியல் கட்சிகளில் பரப்புரைகள் நேற்று இரவு 7 மணியோடு நிறைவு பெற்றது.

தமிழகத்தில் 6,28,69, 955 பேர் வாக்களிப்பதற்காக 88, 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலையே வாக்குப் பதிவு துவங்குவதால்,இதற்கான ஏற்பாடு பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் பூத் சிலிப் விநியோகம் செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக தேர்தலின் போது வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் விதமாக, அவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று அரசு அதிகாரிகள் பூத் சிலிப் வழங்குவார்கள்.

ஆனால், நாளை நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதில் குளறுபடி நடந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் விநியோகிக்கப்படவில்லை. ஒரு வீட்டில் நான்கு வாக்காளர்கள் இருந்தால், ஒருவருக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், பூத் சிலிப் அச்சிட்டு முறையாக வந்து சேராததாலே, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read: மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை; 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு?: ராதாகிருஷ்ணன் பேட்டி!