Tamilnadu

சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தோல்வி பயத்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட மோடி அரசு!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் தெளிவுபடுத்தி வருகின்றன.

அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் செல்லுமிடமெல்லாம் மக்கள் ஊழல் அ.தி.மு.கவையும், மதவெறி பா.ஜ.கவையும் வீழ்த்துவது உறுதி என்பது கண்கூடாகத் தெரிகிறது. தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க வேட்பாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் நீலாங்கரையில் உள்ள சபரீசன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது, தி.மு.க.வுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது என தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!