Tamilnadu
"ஏற்கனவே இருப்பதை நிறைவேத்த போறீங்களா?” - தோல்வி பயத்தால் இஷ்டத்திற்கு தேர்தல் அறிக்கை விட்ட எச்.ராஜா!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றபோதே அ.தி.மு.க தொண்டர்கள் இவர்களை நாம் சேர்த்தால் தோற்பது உறுதியாகிவிடும். எனவே அவர்களைக் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸிடம் போராடிப் பார்த்தனர். ஆனால், தொண்டர்களின் கருத்தைக் கேட்காமல் டெல்லி அச்சுறுத்தலால் பா.ஜ.கவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது அ.தி.மு.க.
இந்த முடிவு அ.தி.மு.க தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.கவினர், பா.ஜ.கவிற்கு தேர்தல் பணி செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வி பயத்தில் இருந்து வருகின்றனர்.
பா.ஜ.க அரசு மீது கடும் கோபத்தில் இருந்துவரும் தமிழக மக்கள் இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடும் இருக்கின்றனர். இதனால் பயந்துபோன பா.ஜ.க வேட்பாளர்கள், தங்களின் கட்சி பெயரையும், நரேந்திர மோடியின் பெயரையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் பா.ஜ.க பெயரை பயன்படுத்தாமல் பிரச்சார நோட்டீஸ் அடித்து வாக்காளர்களுக்கு கொடுத்து பிரச்சாரம் செய்தார். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை மோடியின் பெயரை சுவர் விளம்பரங்களில் தவிர்த்துள்ளார். மூச்சுக்கு முந்நூறு முறை மோடி பெயரை உச்சரித்து வந்த எச்.ராஜா, பா.ஜ.கவின் வேட்பாளர் என்பதைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் என பிரச்சார நோட்டீஸ்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காரைக்குடி பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அம்ருத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்றும், காரைக்குடியில் இல்லவே இல்லாத சிப்காட் தொழிற்பேட்டை புனரமைக்கப்படும் என்றும், ஏற்கனவே செட்டிநாடு கன்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலையில், தான் வெற்றி பெற்றால் செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் கூட அ.தி.மு.க கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று பயன்படுத்திய முகப்பு படத்தைத்தான் வைத்திருக்கிறார். “நீங்கதான் தைரியமான ஆளாச்சே பாஸ்... பா.ஜ.க வேட்பாளர் என வைக்க வேண்டியது தானே” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!