Tamilnadu
‘தமிழன் மேல பயம் இருக்குல்ல..’ : மோடி பெயரையே பிரசாரத்தில் பயன்படுத்தாமல் தவிர்க்கும் ஆட்டுக்கார தம்பி!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.
மேலும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதேபோல் அ.தி.மு.க தொண்டர்களும் பா.ஜ.க மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர்கள் பா.ஜ.கவின் கொடியையும், நரேந்திர மோடியின் படத்தையும் தவிர்த்து வருகின்றனர்.
அதேபோல் கூட்டணியில் உள்ள பா.ம.கவும் பிரச்சாரங்களில் பா.ஜ.க.வினரை தவிர்த்து வருகிறது. நேற்று திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரைக் கண்டித்து பா.ம.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி அ.தி.மு.க கூட்டணிக்குள்ளே பல சண்டைகள் சச்சரவுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் அண்ணாமலை களம் காண்கிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சுவர் விளம்பரம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் முதலில் மோடியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் அண்ணாமலை என எழுதியுள்ளனர்.
பின்னர், தமிழக மக்கள் நரேந்திர மோடி, பா.ஜ.க மீது மக்கள் கோபதில் இருக்கின்றனர். பா.ஜ.கவின் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மேலும் அ.தி.மு.கவினரும் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருக்கின்றனர். மோடியின் ஆசைபெற்ற வேட்பாளர் என்றால் அ.தி.மு.க ஓட்டே நமக்கு வராது என்ற பயத்தில், மோடியின் பெயரை அழித்து, ஜெயலலிதாவின் ஆசிபெற்ற வேட்பாளர் என மாற்றியுள்ளனர்.
கோவை தொகுதியில் கூட பிரச்சார நோட்டிசில் மோடியின் படத்தை தவிர்த்துள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் மோடி படத்தையும், பெயரையும் பயன்படுத்த முடியாமல் பா.ஜ.க வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் மோடி பெயரை கூவி.. கூவி பேசியவர்களுக்கு, தோல்வி பயத்தில் மோடி பெயரையே பா.ஜ.க தவிர்த்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!