Tamilnadu
எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் சமஸ்கிருதத்தை திணிக்க துடிக்கும் பா.ஜ.க... கடும் எதிர்ப்பால் பின்வாங்கல்!
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இந்தி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது.
தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும் இந்தி திணிப்பையும், பா.ஜ.க-வையும் எதிர்த்து வரும் நிலையிலும், முடிந்த அளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை தமிழத்தில் திணிக்க முட்டிமோதிப் பார்க்கிறது மோடி அரசு.
தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்படும் கடிதங்களை இந்தியில் அனுப்புவது, அரசு உத்தரவுகளை இந்தியில் வெளியிடுவது, தமிழக வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிடுவது என பா.ஜ.க விடாமல் தமிழ் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது.
மேலும், கல்விக்கூடங்களில் இந்தி, சமஸ்கிருதப் பாடங்களை கட்டாயமாக்கவும் முயன்று வருகிறது பா.ஜ.க. தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே, இம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கரூர் மாவட்டம் மகாதானபுரம் ரயில் நிலையத்தின் பெயரிலுள்ள ‘கா’ என்ற தமிழ் எழுத்திற்கு பதிலாக சமஸ்கிருத எழுத்தான ‘ஹா’ என்ற எழுத்து இடம் பெற்றிருந்தது.
பல்லாண்டுகாலமாக மகாதானபுரம் என்றிருந்த ரயில் நிலையத்தின் பெயர் பலகையை மஹாதானபுரம் என்று மாற்றியது பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மத்திய அரசு சமஸ்கிருத மொழியினை தமிழகத்தில் திணிக்கிறதா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த கிருஷ்ணராஜபுரம் தி.மு.க வேட்பாளர் சிவகாமசுந்தரி, “தென்னக இரயில்வே சேலம் பிரிவு அறிவுறுத்தலின் மகாதானபுரம் ரயில்வே நிலையத்தில் "மகாதானபுரம்" என்றிருந்ததை "மஹாதானபுரம்" என சமஸ்கிருத எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இந்தி -சமஸ்கிருத திணிப்பை கைவிடுக!” என வலியுறுத்தினார்.
மகாதானபுரம் மக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பால் ரயில் நிலையத்தில், சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற ஊரின் பெயர் அழிக்கப்பட்டு, மீண்டும் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!