Tamilnadu
“நாங்களே ஜெயிக்கமாட்டோம் போல..” - தோல்வி பயத்தில் சொந்த தொகுதிகளிலேயே முடங்கிய அ.தி.மு.க அமைச்சர்கள்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தி.மு.கவின் வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வாயிலாக தெரிய வருகிறது. மேலும் பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரம் போகும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் இந்த முறை, தங்கள் தொகுதியையே தக்கவைக்க முடியுமா என்ற அச்சத்தில் இருப்பதால், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், தமிழகத்தின் வேறு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செல்லாமல் தங்கள் தொகுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.
குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் வேறு தொகுதிகளுக்கு பிரச்சாரம் செல்லாமல் தங்கள் தொகுதிகளையே தக்கவைக்க முடியாது என்கிற தோல்வி பயத்தில் தங்கள் தொகுதியிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும், அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வாராமல் இருப்பதால் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்