Tamilnadu
“பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பி தி.மு.கவினர் மீது அதிமுக குண்டர்கள் தாக்குதல்”: கரூரில் நடந்த அராஜகம்!
கரூரில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த அ.தி.மு.க வேட்பாளர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் தி.மு.கவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.கவினர் நள்ளிரவில் கல்வீச்சு மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரத்தில் கலந்துகொண்டு நள்ளிரவு வீடு திரும்பிய தி.மு.கவினரின் வாகனங்களை வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க வார்டு செயலாளர் நவேஷ் தலைமையிலான கும்பல்கள் குடிபோதையில் வாகனங்களை வழிமறித்து தாக்கினர்.
இதில், தடுக்க சென்ற தி.மு.கவினரை கற்களாலும், உருட்டு கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் இனாம் கரூர் பொறுப்பு குழு நிர்வாகி ரஞ்சிதுக்கு கைமுறிவு ஏற்பட்டது. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் மண்டை உடைந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திகேயன் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வெங்கமேடு காவல்நிலையத்தில் தி.மு.கவினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதில் பலத்த காயம் அடைந்த சிலர் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலத்த காயம் அடைந்தவர்களை தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு பேருந்து நிலையம் அருகே தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு திரட்டி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி அ.தி.மு.கவினர் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?