Tamilnadu

3வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!

தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மெத்தன நடவடிக்கைகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 500க்கும் குறைவாக தினசரி பாதிப்பு பதிவாகிவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்தைக் கடந்துவந்த கொரேனா பாதிப்பு எண்ணிக்கை மூன்றாவது நாளக இன்றும் ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 75,258 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,84,81,109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,46,480 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 7,9,3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,599ஆக அதிகரித்துள்ளது.

Also Read: வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு குடும்பத்துடன் தப்பி ஓடிய காவலாளி : சென்னை அருகே நடந்த பயங்கரம்!