Tamilnadu
“அமைச்சராக இருந்தபோது தொகுதி பக்கமே தலைகாட்டாத கடம்பூர் ராஜு இப்போது ஏமாற்றுகிறார்” : கனிமொழி MP விளாசல்!
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் பாராளுமன்ற தி.மு.க குழு துணைத்தலைவர் கனிமொழி முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் பேரணியாக வருகை தந்தார். இந்த பேரணியில் கனிமொழி எம்.பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதா ஜீவன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., “வருமான வரித்துறை சோதனை மூலம் பா.ஜ.க எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சி.ஏ.ஏ சட்டம் கொண்டுவந்தபோது ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க, தற்போது தேர்தல் என்றவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. மேலும் அ.தி.மு.க அரசு எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
குறிப்பாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களே இருந்து வருகிறார்கள். ஆனால் இதுவரை உருப்படியான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
மேலும் தற்போது அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு இதுவரை மக்களை சந்திக்காமல் தற்போது தேர்தல் வந்தவுடன் மக்களை சந்தித்து ஏமாற்றி வருகிறார். தமிழகத்தில் கொரோனா காலத்தில் சிறுகுறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் சிறு குறு தொழில்களை அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.
மேலும் தமிழகத்தில் சுயமரியாதையை தன்மானத்தை பா.ஜ.கவிடம் அடகு வைக்கும் வேலையைத் தான் அ.தி.மு.க அரசு செய்து வருகிறது. தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” எனப் பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!