Tamilnadu
“மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட துறைத் தலைவர்” : சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறை தலைவர் சௌந்தராஜன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அத்துறை மாணவ மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர் சிவாபிரகாசம் பேசுகையில், சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையில் மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் மெரினா விடுதி உணவ கட்டண கொள்ளை எதிராக போராட்டம் நடத்தியதால் அத்துறை சார்ந்த 8 மாணவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து சென்னை பல்கலைக்கழகம் பழி வாங்கியது .
இதை எதிர்த்து இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். மீண்டும் விடைதாள் திருத்திய போது 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்றாத கூறினார். அந்த தேர்ச்சி செய்தியை எழுத்துபூர்வமாக தரும் படி தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனிடம் கேட்ப போது மாணவர்களை தாக்கி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் நடந்துக்கொண்டார்.
இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களும் பதிவாளரும் உடந்தையாக இருந்தாகாவும், இரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் பல்கலைக்கழக தொல்லியதுறை தலைவர் சௌந்தரராஜன் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!