Tamilnadu
பெண் உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக்கு வராமல் ஏமாற்றிய எஸ்.பி.,க்கள் - CBCID போலிஸார் தகவல்!
பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி மற்றும் அவரை புகார் அளிக்க விடாமல் தடுத்த மாவட்ட எஸ்.பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த அடிப்படையில் நேற்று சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்காக சிறப்பு டிஜிபி ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான காவல் துறை சேர்ந்த சுமார் 60 பேரை சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதை அடிப்படையாக வைத்தே சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு சிறப்பு டி.ஜி.பி மறுப்பு தெரிவித்தாக சிபிசிஐடி போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகாரளிக்க வரும்போது தடுத்து நிறுத்திய மாவட்ட எஸ்.பியை விசாரிப்பதற்கு சிபிசிஐடி போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பியும் மருத்துவ காரணங்களை காட்டி எஸ்.பி விசாரணைக்கு ஆஜராக வில்லை என சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மாவட்ட எஸ்.பி உடன் இணைந்து பெண் எஸ்.பியை தடுத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதால், தடுத்து நிறுத்திய மாவட்ட எஸ்.பி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார். ஏற்கனவே தடுத்து நிறுத்திய மாவட்ட எஸ்.பி சிறப்பு டி.ஜி.பி உத்தரவை மட்டுமே தான் பின்பற்றியதாகவே விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி உடன் இணைந்து தெரிந்தே பெண் எஸ்.பியை தடுத்து இருந்தால், 120 பி கூட்டுச்சதி என்ற சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, மாவட்ட எஸ்.பி மீது விசாரணை தீவிரப்படுத்தப்படும் என சிபிசிஐடி போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வருகிற 16-ஆம் தேதி மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதால், மாவட்ட எஸ்.பியை உடனடியாக விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிபிசிஐடி போலீசார் உள்ளனர். மேலும் விசாக கமிட்டியும் ஒருபுறம் விசாரணை நடத்தி வருவதால் அதன் அறிக்கையும் ஆதாரமாக விசாரணையில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக சிபிசிஐடி போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்