Tamilnadu

தமிழ்-தமிழர் நலனுக்கு முதலிடம்: அண்ணா- கலைஞர் வழியில் தமிழக விடியலை முன்மொழிந்த தி.மு.க தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை- 2021 யை இன்று வெளியிட்டார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தேர்தல் அறிக்கையில் தமிழ், தமிழர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு:

திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

மாநில ஆட்சிமொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகள் ஆக பாடுபடுவோம்.

மத்தியப் பணிகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடத்த வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்.

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்பட வேண்டும்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தன்னாட்சி பெற்று இயங்கும்.

உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்.

உலகப் புகழ்பெற்ற நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

புகழ்பெற்ற தமிழ்நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழி வளர்ச்சி பிரிவு அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வலியுறுத்துவோம்.

இலங்கை போர்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை.

தாயகம் திரும்பிய ஈழத்தமிழர்க்கு குடியுரிமை வழங்கக் கோருவோம்.

வெளிநாடு வாழ்தமிழர்களுக்கு தனித் துறை உருவாக்கப்படும்.

கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்கப்படும்.

தமிழர் தொன்மையை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

நாட்டுப்புற கலைவிழாக்கள் நடத்தப்படும்.

எட்டாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.

சென்னையில் திராவிட இயக்கக் கோட்டம் அமைக்கப்படும்.

பொங்கல் திருநாள் தமிழரின் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.

தமிழ் எழுத்து வரி வடிவங்களை மாற்றுவது தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் மேற்கண்டவாறு தமிழ், தமிழர் நலனுக்கான முக்கியத்துவம் அளிக்கும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

தமிழகத்தின் விடியலை அறிவிக்கும் தேர்தல் கதாநாயகனாக தி.மு.க தேர்தல் அறிக்கை உள்ளதாக அரசியல் அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் அண்ணா கொள்கைகளின் பிரதிபலிப்பாக சட்டசபைத் தேர்தல் அறிக்கையினை முன்மொழிந்துள்ளார் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நீட் ரத்து முதல் கல்விக் கடன் தள்ளுபடி வரை... கல்வி வளர்ச்சிக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை! #DMK4TN