Tamilnadu
கலைஞர் உணவகம், பெட்ரோல் விலைக்குறைப்பு, கொரோனா நிதி: மக்கள் குறை தீர்க்க வந்தது தி.மு.க தேர்தல் அறிக்கை!
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இதனிடையே நேற்றைய தினம் 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே நேற்றைய தினம் 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கலைஞர் உணவகம், பெட்ரோல் விலைக்குறைப்பு, கொரோனா நிதி 4 ஆயிரம் என உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
- குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் கொண்டு வரப்படும்.
- அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட் ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
- அதேப்போல், ஜூன் 3 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
- அதுமட்டுமல்லாது, விவசாயிகள் பயன்பெரும் வகையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஜூன் 3 ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் முதல் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.
- கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!