Tamilnadu

நீட் ரத்து முதல் கல்விக் கடன் தள்ளுபடி வரை... கல்வி வளர்ச்சிக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை! #DMK4TN

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

தி.மு.க சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் கல்விக்காகவும், மாணவர்கள் நலனுக்காகவும் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் வருமாறு :

1.மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. மருத்துவக் கல்லூரி இடங்கள் அமைத்தும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

3. ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

4. மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.

5. பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து உணவாக பால் வழங்கப்படும்.

6. 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

Also Read: பேறுகால விடுமுறை 12 மாதம், உதவித்தொகை, பாதுகாப்பு என பெண்களுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை!