Tamilnadu
“ராமதாஸுக்காக ரத்தம் சிந்தியது போதும்.. இனி எனக்காக வாழ்கிறேன்”- விரக்தியால் வெளியேறும் பா.ம.க நிர்வாகி!
தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி, வேட்பாளர் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.கவுக்கு 20 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் பா.ம.கவும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பா.ம.க தலைமைக்கு எதிராகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்காததால், பா.ம.கவில் நடிப்புக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகுவதாக வைத்தி அறிவித்தார்.
இதையடுத்து, பா.ம.கவில் கடலூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் சமட்டிக்குப்பம் இரா. ஆறுமுகமும், ரத்தம் சிந்தியது போதும், இனி சிந்திப்போம் எனக் கூறி பா.ம.கவில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து ஆறுமுகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நான் செய்த களப்பணியை பார்த்து என்னை கொலை செய்ய முயற்சி நடந்தபோது என் கைகளிலும் கால்களிலும் வெட்டுப்பட்டது. அப்படி வெட்டுப்பட்ட கால்களால் ஓடி ஓடி கட்சி பணி செய்தேன். வெட்டுப்பட்ட கைகளால் எத்தனை கொடிக் கம்பங்களை நட்டு இருப்பேன்.
இந்த இயக்கத்திற்காக வெறும் வியர்வை மட்டும் இல்லாமல் என் ரத்தத்தையும் சிந்தி உயிரைப் பணையம் வைத்து களப்பணியாற்றினேன். இனி என் உடம்பில் இருக்கும் ரத்தம் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ தேவைப்படும். உடலாலும் மனதாலும் நான் அதிக வலிகளை அனுபவித்துவிட்டேன். அதனால் இன்று முதல் பா.ம.க-வுக்கான களப்பணியில் இருந்து ஓய்வெடுக்கப் போகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இன்று ஒரே நாளில் பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து விலகியிருப்பது, தேர்தல் நேரத்தில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!