Tamilnadu
பள்ளி சிறுமியை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை - முகநுால் நட்பால் நடந்த விபரீதம்!
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயதுடய சிறுமி அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ந்தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்று மாயமாகினர்.
சிறுமியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிய எங்கும் கிடைக்காததால் எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில் சிறுமி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததை பெற்றோர் கண்டித்ததாகவும் இதனால் கோபித்துக் கொண்ட சிறுமி, தனக்கு முகநுால் வழியாக நண்பரான ஒருவரின் அக்கா வீட்டிற்கு சென்று, தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பேஸ்புக் நண்பருக்கு தெரியாமல், அவரது அக்கா வீட்டில் சிறுமி தஞ்சமடைந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியை அழைத்து வந்து போலிஸார் விசாரணை நடத்திய போது, எண்ணுார் வ. ஊ. சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அழகுராஜ் கடந்த ஒரு வருடமாக நட்பாக பழகி சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்து வைத்து மிரட்டி பாலியல் உறவு வைத்து கொண்டது தெரியவந்தது.
மேலும், தாழ குப்பத்தைச் சேர்ந்த அஜித்(23) ஆகியோர் சிறுமியிடம், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக, சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!