Tamilnadu
“தி.மு.க MLA-க்கு நம்பியார் பாணியில் கொலை மிரட்டல்” : அசால்ட்டாக டீல் செய்த கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்!
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமாக என்.சுரேஷ்ராஜன் உள்ளார். தி.மு.க தலைமை அறிவுறுத்தலின் படி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாளாக சுரேஷ்ராஜனை தொடர்பு கொண்ட நபர், தன்னை எழுத்தாளர் என கூறி தேர்தல் பணியை இடையூறு செய்து வந்துள்ளார்.
அப்போது, தொலைபேசி இணைப்பை துண்டித்த போது, வெவ்வேறு என்னில் இருந்து பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தனக்கு முன், பின் அறிமுகம் இல்லாத நபர் தொடர்ந்து தனக்கு இடையூறு செய்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுரேஷ்ராஜன் அளித்த புகார் மனுவில், “நான் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருவதுடன் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது.
இதில் பேசியவர் நான் எழுத்தாளர் மூர்த்தி மேல்மருவத்தூரில் இருந்து பேசுவதாக கூறி என்னை அசிங்கமாகவும் கேவலமாகவும் பேசி மிரட்டினார். நான் யாரோ பேசுகிறார் என்று நினைத்து அதனை பெரிதாக நினைக்கவில்லை. இந்நிலையில், ஐந்தாம் தேதி அதே நம்பரில் இருந்து காலை பகல் மாலை என்று ஐந்து முறை தொடர்ச்சியாக போன் செய்து இந்த முறை எலக்சன் நின்றல் உன்னை அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவேன் என அசிங்கமாகவும் அவதூறாகவும் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார்.
நான் அந்த போனை துண்டித்துவிட்டேன். மேலும் அந்த எண்ணை பிளாக் செய்தேன். இந்நிலையில் வேறு எண்ணில் இருந்து பகல் 12 மணி போன் செய்து தொடர்ந்து மிரட்டினார். என்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்ததுடன் தொடர்ந்து போனில் பேசி மிரட்டி வருகிறார்.
நான் அந்த செல்போன் எண்களையும் பிளாக் செய்த பின்னரும் அடுத்த நம்பரில் இருந்து மிரட்டி வருகிறான். எனவே பல்வேறு எண்களில் இருந்து என்னை தொடர்ந்து மிரட்டி வரும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேசமணி நகர் போலிஸாருக்கு இந்த புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !