Tamilnadu
’பழனி எங்களுக்குத்தான்..’ : அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு ’ஷாக்’ கொடுக்கும் பா.ஜ.க
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் இழுபறியுடன் தொடர்ந்து வருகின்றன.
இதுவரை பா.ம.கவுக்கு மட்டும் 23 தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. மேலும் பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க தலைமையுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும், பா.ஜ.கவுக்கு எத்தனை இடம், எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்க முடியாமல் அ.தி.மு.க திணறிவருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பழநி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள், சுவரில் தாமரை சின்னத்தை வரைந்து, பழனியில் நாங்கள்தான் போட்டியிடப் போகிறோம் என சூசகமாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் பூத்கமிட்டிகள் அமைத்து தேர்தல் பணியில் பா.ஜ.கவினர் ஈடுபட்டுள்ளனர்.
"பழநி தொகுதி எங்களுக்குக் கட்டாயம் ஒதுக்கப்படும் என்பதால்தான் நாங்கள் தேர்தல் பணிகளைத் துவங்கியிருக்கிறோம்" என பா.ஜ.கவினர் கூறிவருகின்றனர். பா.ஜ.கவினரின் இந்தச் செயல் அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பா.ஜ.க, தொகுதிப் பங்கீடு விவகாரத்திலும் வல்லாதிக்கம் செலுத்துவதாக அ.தி.மு.க-வினர் குமுறுகின்றனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!