Tamilnadu
“கல்பாக்கத்தில் கதிர்வீச்சு அபாயத்தால் பத்திரப்பதிவுக்கு தடை” : அரசுக்கு எதிராக திரளும் 14 கிராம மக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 5 கி.மீ., சுற்றளவிற்குள் வரும் மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமப்பகுதிகளை நிலா கமிட்டி வரையறை செய்துள்ளது. மேலும், பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், வரையறை எல்லையில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி உறுப்பினர் செயலர் பரிந்துரையின் பேரில் மாவட்ட நிர்வாகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்கள் கிராம மக்களிடையே பரவியதை தொடர்ந்து, நிலா கமிட்டியின் உத்தரவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்பேரில், மாமல்லபுரம், புதுப்பட்டினம், அணுபுரம், கல்பாக்கம் நகரியப்பகுதி உட்பட பாதிக்கப்பட்ட 14 கிராமங்களில் குடியிருப்புகள், ஈ.சி.ஆர் சாலை மின்கம்பங்கள் மற்றும் அணுமின் நிலைய வளாகத்தின் முகப்பு பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் இன்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், அணுமின் நிலைய நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!