Tamilnadu
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு : ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணை!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டு மனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கும் அதிகமாகும்.
வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த சொத்து குறித்து மட்டும் விசாரிக்கக்கூடாது. ராஜேந்திர பாலாஜி 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் அவர் 1996 ஆம் ஆண்டே பொது ஊழியராக இருந்துள்ளார். எனவே இவ்வாறு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்தது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு மாற்றாக நீதிபதி ஹேமலதா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து மூன்றாவது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!