Tamilnadu

“பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ அதேபோன்று நரேந்திர மோடியை திருப்பி அனுப்புவோம்” : ராகுல்காந்தி

தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இரண்டாவது நாள் தேர்தல் பரப்புரையாக பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் கல்வியாளர்கள் பேராசிரியர்கள். உடன் கலந்துரையாடல் மேற்கொண்டார் பல்வேறு ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி கலந்துரையாடல் வடிவில் கற்றல் கற்பித்தல் பணிகள் இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, “கல்வித்துறைக்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கக்கூடாது. முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருப்பதால் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது யார்? தமிழகத்தில் மூன்று பேர் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

குறிப்பாக, நாட்டின் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசு சில குறிப்பிட்ட மதத்தினரை பேச அனுமதி மறுக்கிறது. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் தங்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும்.

ஆனால் அந்த அங்கீகாரம் பா.ஜ.க ஆட்சி கொடுப்பத்தில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோம் அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி நரேந்திர மோடி நாக்புருக்கு திருப்பி அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.

Also Read: கடைசி நேரத்தில் கல்லா கட்டும் எடப்பாடி அரசு : அரசு வேலைக்கு 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அதிமுக பிரமுகர்கள்?