Tamilnadu
“மார்ச் 2ம் தேதி முதல் தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும்” : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !
தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பம் செலுத்தியவர்களுக்கு மார்ச் 2 முதல் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக காலை, மாலை என வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 2-3-2021 முதல் 6-3-2021ஆம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்/ பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நேர்காணல் நடைபெறும் நாள் விவரம் பின்வருமாறு:
மார்ச் 2 செவ்வாய் காலை 8.00 மணி கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு இராமநாதபுரம்.
மாலை 4.00 மணி விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு.
மார்ச் 3 புதன் காலை 9.00 மணி மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு திருப்பூர் மத்திய, வடக்கு.
மாலை 4.00 மணி திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு.
மார்ச் 4 வியாழன் காலை 9.00 மணி தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு.
மாலை 4.00 மணி கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு.
மார்ச் 5 வெள்ளி காலை 9.00 மணி தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்திய.
மாலை 4.00 மணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மார்ச் 6 சனி காலை 9.00 மணி திருவள்ளூர் கிழக்கு,மத்திய,மேற்கு சென்னை வடக்கு, வடகிழக்கு சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு.
மாலை 4.00 மணி புதுச்சேரி, காரைக்கால்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!