Tamilnadu

நிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை!

அ.தி.மு.க ஆட்சியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் ஊழலில் திளைத்து வருகின்றனர். பணி வழங்குவதற்கும், அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் லஞ்சம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊழல் அ.தி.மு.க ஆட்சியில் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வேளாண்மை அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்குமா என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் வேளாண்மை உதவி அலுவலர் தாமரைச்செல்வன் என்பவர் அறுவடை கணக்கீடு செய்த பின்பு தொடர்ந்து விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “வேளாண்மை உதவி அலுவலர் தாமரைச்செல்வன் கட்டுபாட்டில் 14 ஊராட்சிகள் உள்ளன. நிவாரணம் மற்றும் பயீர்க் காப்பீடு குறித்து கேட்டால் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கிறார்.

வேளாண்மை உதவி அலுவலர் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாாிகள் முறையாக விசாரணை நடத்தவேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா?