Tamilnadu
“பைக்கில் வந்தவரை வழிமறித்து செயின் பறிப்பு” : சினிமா பாணியில் வழிப்பறி கும்பலை மடக்கிப்பிடித்த போலிஸ்!
சினிமா பாணியில் நள்ளிரவில் பழவந்தாங்கல் சப்வேக்குள் பைக்கில் வந்தவரை வழிமறித்து தங்க செயினை பறித்துவிட்டு, மற்றொரு பைக்கில் தப்பி சென்ற 3 போ் வழிப்பறி கும்பலை விரட்டி சென்ற போலிஸார் சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் கால்வாய்க்குள் விழுந்தவா்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனா்.
சென்னை பழவந்தாங்கல் சப்வேயில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் வந்த ஒருவரை 3 போ் கொண்ட கும்பல் வழிமறித்து,அவா் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்தனா். பின்பு செயின் பறிப்பு கும்பல்கள் 3 பேரும் ஒரே பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் ஜி.எஸ்.டி சாலை நோக்கி பறந்தனா்.
செயின் பறிகொடுத்தவா் விடாமல் பைக்கில் விரட்டி வந்தாா். அதோடு பைக் நம்பரை குறிப்பிட்டு அவசர போலிஸ் 100 க்கும் தகவல் கொடுத்தாா். செயின் பறிப்பு கும்பல்களின் பைக் மின்னல் வேகத்தில் ஜி.எஸ்.டி சாலையில் வந்து சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் நுழைந்தது. ஆனாலும் விடாமல் செயினை பறிகொடுத்தவரும் விரட்டி வந்தாா்.
இதற்கிடையே போலிஸ் கட்டுப்பாட்டு அறை தகவலின் பேரில், அப்பகுதியில் இரவு ரோந்து பணியிலிருந்த போக்குவரத்து போலிஸா,சென்னை விமானநிலைய போலிஸா ஆகியோரும் விரட்டினா். விமானநிலைய வளாகத்திற்குள் புகுந்த செயின் அறுப்பு கும்பல், விமானநிலைய நிா்வாக அலுவலகம் அருகே சென்று, விமானநிலைய ஊழியா்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று, பின்பு BCAS அலுவகம் அருகே உள்ள சாலை வழியாக மீண்டும் ஜி.எஸ்.டி சாலைக்கு செல்ல முயற்சித்தனா்.
ஆனால் விமானநிலைய வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகாா்டில் பைக் மோதி, அருகே உள்ள மழைநீா் கால்வாயில் விழுந்தனா். உடனடியாக விரட்டி வந்த போலிஸார் ,மற்றும் விமானநிலைய ஊழியா்கள் சூழ்ந்து கொண்டனா். கால்வாயிக்குள் விழுந்து கிடந்தவா்களை தூக்கி எடுத்துவைத்து போலிஸார் விசாரணை நடத்தினா். அதற்குள் செயினை பறிகொடுத்தரும் அங்கு வந்துவிட்டாா்.
அதன்பின்பு அவா்களை சென்னை விமானநிலைய போலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்துகின்றனா். சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!