Tamilnadu
“காணாமல் போனவர்கள் 40 நாட்களுக்கு பிறகு சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு” : பாட்டி-பேத்திக்கு நடந்தது என்ன?
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதியம்மாள். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோமதியம்மாள் மற்றும் அவரது ஒன்றரை வயதான பேத்தி உத்ரா என்ற சாக்ஷி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இந்நிலையில் தென்காசி அருகே உள்ள முத்துமாலை புரம் கிராமத்தில் துர்நாற்றம் வீசிய நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில், பாவூர்சத்திரம் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டை பிரித்துப் பார்த்த போது அதில் அழுகிய நிலையில் பிணம் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அது 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கோமதியம்மாள் மற்றும் அவரது பேத்தி உத்ரா என்ற சாக்ஷி ஆகியோர் என்பது தெரியவந்தது.
பாட்டி - பேத்தியின் உடலை கைப்பற்றிய போலிஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!