Tamilnadu

கோயம்பேடு மெட்ரோவில் ‘பாஷ்யம்’ பெயர் நீக்கம்.. தமிழர்களின் உணர்வாக செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோயம்பேட்டில் சென்னை மெட்ரோவின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, கோயம்பேடு மெட்ரோ அருகில் உள்ள பாலத்தில், ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயரை எழுதியிருந்தனர்.

இதுதொடர்பாக எந்தவிதமான முன்னறிவிப்பையும், சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடவில்லை என அப்போது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் யார் அந்த பாஷ்யம் என்பது தமிழ்நாடு அரசுக்காவது தெரியுமா என்று கூற வேண்டும் என்றும் பல்வேறு கேள்விகளை அரசியல் கட்சியினர் எழுப்பியிருந்தனர்.

சென்னை மாநகராட்சியோ அரசோ அதற்கு விளக்கம் எதுவும் கொடுக்காத நிலையில், பாஷ்யம் என்பவர் விடுதலைப் போரில் கலந்துகொண்டவர் என தனது பாணியில் தினமலர் கட்டுக்கதை ஒன்றை வெளியிட்டது. தினமலரின் இத்தகைய கட்டுக்கதைக்கு, பாஷ்யம் என்ற விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட வீரரின் பெயரை வைக்கவில்லை என்றும், அது கட்டுமான நிறுவனத்தின் பெயர் என்றும் ஆராய்ந்து பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் புதிதாக தி.மு.க ஆட்சி வந்த பிறகு, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயரில், பாஷ்யம் என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களின் உணர்வுகளை பாதிக்கும் எந்த செயலும் தி.மு.க ஆட்சியில் இடம்பெறாது என்பதற்கு பெரும் உதாரணமாக இத்தகைய மாற்றம் நடந்துள்ளதாகவும் இது வரவேற்கத்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, பாஷ்யம் நிறுவனம் அந்தப் பகுதியில் ஒரு குடியிருப்பு ஒன்றைக் கட்டுவதாகவும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்துவருவதாகவும், அதனால் தங்கள் நிறுவனத்தின் பெயரை, நிலையத்திற்குச் சூட்டிவிட்டார்கள் என்றும் மெட்ரோ அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது. அ.தி.மு.க ஆட்சியில் இதற்காக பெரும் பணம் விளையாடி இருக்கிறது என்றும் குற்றம்சாட்டி இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Also Read: “காரில் கொக்கைன் கொண்டு சென்ற வழக்கில் பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் கைது” : மே.வங்க போலிஸார் அதிரடி !