Tamilnadu

“அரசு மருத்துவர் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை?” - உதயநிதி ஸ்டாலின் தாக்கு!

சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் லோகோஷ் குமார் கொரோனா நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க அடிமைகள் முன்வர வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பணியில் ஈடுபட்டு தனிமைப்படுத்தலில் இருந்த இளம் மருத்துவர் லோகேஷ்குமார் கடந்த அக்டோபரில் உயிரிழந்தார். அவரது மரணத்தை தாமதமாக வீட்டாருக்கு தெரியப்படுத்திய அடிமை அரசு, ‘லோகேஷ் தற்கொலை செய்துகொண்டார்’ என மனசாட்சியின்றி கூறியது.

‘தற்கொலைக்கு வாய்ப்பேயில்லை’ என லோகேஷின் குடும்பத்தார் மறுத்தனர். ‘லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை’ என்று பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. மாறாக, ’சளி, காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகள் (Pneumonia) இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவில் இறக்கும் மருத்துவர்களின் மரணங்களை மறைப்பதாக நினைத்து அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி வரும் பழனிச்சாமி அரசு, லோகேஷ் மரணத்திலும் அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.லோகேஷ் மறைந்து 4 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இதுவரை அவரது குடும்பத்தாருக்கு உண்மைநிலை விளக்கப்படவில்லை.

லோகேஷின் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க அடிமைகள் முன்வர வேண்டும். அரசு மருத்துவரான லோகேஷின் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துகிறதா எடப்பாடி அரசு? - மருத்துவர்கள் ஆவேசம் !