Tamilnadu

7வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம்; கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் மோடி அரசு.. அல்லல்படும் மக்கள்!

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் 100 ரூபாயை எட்டிய நிலையில் தமிழகத்திலும் கூடிய விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வகையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 29 காசுகள் உயர்ந்து 91.19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேப்போன்று, டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 84.44 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த ஏழே நாட்களில் மட்டுமே பெட்ரோல் விலை ரூ.1.49ம், டீசல் விலை ரூ.1.78ம் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை உச்சமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்ததோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வதால் ஏழை எளிய மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசோ எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் தொடர்ந்து எரிபொருட்களின் விலையை உயர்த்தியபடியே இருப்பதை வேடிக்கை பார்ப்பது சர்வாதிகார போக்கையே குறிக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Also Read: ’சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலை 40 ரூபாய் தான்’: மோடி அரசின் நடவடிக்கையை முட்டாள்தனம் என சொல்லும் சு.சாமி