Tamilnadu
காஷ்மீர் போல் தமிழகத்திலும் கைது : மோடி வருகையால் விவசாய சங்க தலைவரை வீட்டுக்காவல் வைத்த எடப்பாடி அரசு!
பிரதமர் மோடி இன்று சென்னை வருகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை சென்னை பழவந்தாங்கலில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காவல்துறையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7 மணிமுதல் முதல் அவரை பின்தொடர்த்து இன்று காலை நடைபயிற்ச்சியின் போதும் பின் தொடர்த்து பின்னர் அவரது வீட்டு முன் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.
இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக எந்த போராட்டமும், எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டேன் என்று காவல்துறையிடம் உறுதியாக கூறிய நிலையிலும் இது போன்று வீட்டுக்காவலில் வைப்பது தலைவராக இருந்தாலும் சாமாணியனாக இருந்தாலும் அவரது உரிமையை பறிக்கும் செயலாகும் என்று கே.பாலக்கிருஸ்ணன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கே.பாலக்கிருஷ்ணன் கூறுகையில், “விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வருகையின் போது எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டம் ஏதாவது இருககிறதா என்று காவல்துறையினர் கேட்டார்கள் அதற்கு நான் இல்லை என்று கூறினேன்.
நேற்று இரவு 7 மணிமுதல் 10 வரை நான் எங்கு சென்றாலும் போலிஸார் பின்தொடர்ந்து வந்தார்கள். பின்னர் புறப்படுவதாக கூறிவிட்டு வீட்டின் வாசலில் காவலுக்கு நின்றுவிட்டார்கள். இது அடிப்படையில் அறவழியில் போராட்டம் நடத்தும் தலைவனாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் அவர்களது சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.
எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் இவ்வாறு தமிழக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை என்பது ஆட்சியாளர்கள் மக்களை கண்டு அஞ்சுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அதற்கு காரணம் அவர்களின் தொடர்ந்து கொண்டுவந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் என்பதே குறிப்பாக மோடியின் விவசாய விரோத நடவடிக்கையானது இந்த அளவிற்கு எதிர்ப்பு மக்களிடம், விவசாயிகளிடம் இருக்கும் என்று அனுமானத்தில் வந்துள்ளது.
காஷ்மீரில் தான் வீட்டுக் காவல் என்று கேள்விபட்டுள்ளோம், தமிழகத்திலும் வீட்டுக்காவல் வந்துள்ளது புதியதாக இருக்கிறது. நான் கேள்விபட்டதில்லை, என்றாலும் ஒரு வித்தியாசம் காஷ்மீரில் தொலைதொடர்பு துண்டிக்கப்படும் இங்கு அது இல்லை, இந்த வீட்டுக்காவல் என்பது ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு துறையின் நடவடிக்கை என்பது ஜனநாயக விரோத செயலாகும்” என்று குற்றம்சாட்டினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!