Tamilnadu

2வது நாளாக ரூ.90ஐ கடந்த பெட்ரோல் விலை.. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 90.13ரூபாய் என விற்பனை ஆன நிலையில்26 காசுகள் அதிகரித்து இன்று 90.39 ரூபாய் என விற்பனை ஆகிறது

டீசல் விலை நேற்று 83.13ரூபாய் விற்பனை ஆன நிலையில்,34காசுகள் அதிகரித்து 83.47 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை யால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Also Read: ’சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலை 40 ரூபாய் தான்’: மோடி அரசின் நடவடிக்கையை முட்டாள்தனம் என சொல்லும் சு.சாமி