Tamilnadu
செயின் பறிப்பு முயற்சியின்போது கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை - முன்னாள் இராணுவ வீரர் கைது!
கன்னியாகுமரி அருகே செயின் பறிப்பு முயற்சியின்போது கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளிவிட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (35). இராணுவத்தில் பணிபுரிந்த இவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊருக்குத் திரும்பிய மெர்லின் ராஜ், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முளகுமூடு அருகே பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்த மேரி ஜெயா (45) என்பவர், ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். ரேஷன் கடை திறக்காததால் வீடு திரும்பிக்கொண்டிருந்த மேரி ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க மெர்லின் ராஜ் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் முயன்றுள்ளனர்.
செயினை விடாமல் மேரி ஜெயா கூச்சல் போட்டதால் அப்பகுதியினர் அங்கு ஓடிவந்துள்ளானர். இதனால் அவரை அருகிலுள்ள குளத்தில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் மெர்லின் ராஜ். ஆனால், அவரைப் பிடித்த அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். அவரது கூட்டாளி் தப்பியுள்ளார்.
பின்னர், போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் மேரி ஜெயாவைத் தேடினர். மேரி ஜெயா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெண்ணை குளத்திற்குள் தள்ளி விட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ வீரரான மெர்லின் ராஜ் மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இராணுவ வீரர், தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும், தற்போது ஒரு உயிரிழப்புக்கு காரணமாகியிருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!