Tamilnadu
ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்தி திணிப்பால் மீண்டும் மொழிப்போர் சூழல் ஏற்பட்டுள்ளது - தயாநிதி மாறன் பேச்சு!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தாம்பரம், சண்முகம் சாலையில் நகர இளைஞரணி சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்புறையாற்றினார்கள்
கூட்டத்தின் போது தயாநிதிமாறன் பேசியது:
“இந்தி எதிர்ப்பு இதைத்தான் நம் தலைவர் கலைஞர் அவர்கள் தமது சிறு வயதுலேயே பள்ளிக்கூட பையை தூக்கி எறிந்து விட்டு, இந்திக்கு எதிராக அல்ல இந்தி திணிப்புக்கு எதிராக போராடினார். மத்திய அரசு எங்கோ தொலைவில் இருந்து கொண்டு, ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறிக் கொண்டு வருகிறது.
இப்படி திடிரென்று யாரோ ஒருவர் புதிதாக ஒரு மொழியை படி, இது தான் இனி உன் மொழி என்றால் பெற்ற தாய் தந்தையை விட்டு வேறு நபரை தாய் தந்தை என காட்டுவதுபோல் உள்ளது. ஆனால் இன்று மோடியும், அமித்ஷாவும் ஒரே இந்தியா, ஒரே மொழி என்று கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதற்காக எங்கள் மீது பிற மொழிகளை திணிக்காதே என்று தான் கூறி வருகிறோம். மீண்டும் மொழிபோர் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணா, கலைஞர் போன்று தற்போது திமுக தலைவர் தோள்கொடுப்பார்.
இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் வரி வசூலிக்கப்படுகிறது. மாறாக அந்தப் பணத்தை அந்தந்த மாநிலங்களுக்கு செலவிடாமல், இந்தி பேசும் மாநிலங்களை வளர்த்து வருகின்றனர். முதல் முதலில் நாடாளுமன்றத்தில் பேசி தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கச் செய்தது திமுக ஆட்சியில் தான்.
ஆனால் பழமையான தமிழ் மொழி, வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மாறாக ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில், சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்ட 21,000 மக்களுக்காக 691 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை ஒதுக்கியுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?
தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மோடியின் அடிமை அரசாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசு தற்போது கூட கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் அரசு கண்டுபிடித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை முதலில் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் போட்டுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் கொரோனா தடுப்பு மருந்தின் மீது மக்களுக்கு இருக்கும் பயம் போகும் என்றார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெரும். ஏனெனில் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். இன்னும் மூன்று அமாவாசை தினம் தான். நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள், அதன் பிறகு வரப்போவது திமுக ஆட்சி தான் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்சியில் நகர கழக நிர்வாகிகள் இத்திரன், ரமணி ஆதிமூலம், மாவட்ட பிரிதிநி செல்வகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!