Tamilnadu
“தமிழும் திராவிடமும் தலை நிமிர்ந்து நிற்காவிடில் நம் அடையாளத்தை அழித்திருப்பார்கள்” - திமுக MLA பி.டி.ஆர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “ ஒரே ஒரு அம்மையார் தவறியதால் இந்த தலை இல்லாத வால்கள் கால்கள் எல்லாம் சேர்ந்து இந்த அளவுக்கு மாநிலத்தை மோசமாக்கி இருக்கிறார்கள் என்றால் ஐம்பது வருடம் 60 வருடம் தமிழ் மொழி சுயமரியாதை திராவிடர் கொள்கையே தலை நிமிர்ந்து நிற்காமல் இருந்திருந்தால் மொழிப்போர் தியாகிகள் இல்லாமல் இருந்திருந்தால் எந்த கெதி நமக்கு காத்து இருந்திருக்கும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் குடிதண்ணீர் சரியாக இல்லை. ரோடு சரியாக இல்லை. நிதி மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளது. உண்மை வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. உத்திரபிரதேசம் என்றால் அதுவும் இருக்கும் இஸ்லாமியர்கள் எந்த காரணமும் இல்லாமல் ஜெயிலில் அடைக்கப்படுவதில்லை. பீகார் என்றால் அதுவும் நடக்கும் பெண்களுக்கு ஒரு கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தால் பாலியல் கொடுமை நடக்கும் என்ற அச்சம் இல்லை பொள்ளாச்சியை தவிர.
ஆனால் மத்திய பிரதேசம் என்றால் தெரு தெரு ஒவ்வொரு ஊராக நடக்கும். இதுதான் திராவிடத்திற்கு தமிழுக்கும் இருக்கின்ற சக்தி அதனால் இந்த மாதிரி ஒரு நாளில் தமிழ் இன்றைக்கு இந்த அளவுக்கு தலைநிமிர்ந்து நிற்காவிட்டால் நம் அடையாளம் நம் முன்னோர்களின் செயல் நம் கலாச்சாரம் நம் பண்பாட்டை அழித்திருப்பார்கள் இந்தி தீவிரவாதிகள் இருக்கக்கூடிய தீயசக்திகள். இரண்டாவது நம் புதல்வர்களுக்கு நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கு இந்த அடையாளத்தை பாதுகாத்து இந்த பண்பாட்டை கலாச்சாரத்தை கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும் என்பது நம்முடைய கடமை வரும் தலைமுறைக்கு செய்ய வேண்டிய கடமை என பேசினார்.
இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,நகர செயலாளர் ராஜேந்திரன்,முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி ஒன்றிய நகர நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் வாணியம்பாடியில் நகர பொறுப்பாளர் சாரதி குமார் தலைமையில் நடைபெற்றது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!