Tamilnadu

100 நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு - சாத்தியப்படுவது எப்படி? செயல்திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு நேரடியாக மக்கள் மத்திய களமாடி வருகிறது தி.மு.கவும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும்.

‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை காணொளிக் காட்சி வாயிலாகவும், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பரப்புரை மற்றும் ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்’ என பல்வேறு வகையில் மக்களை சந்தித்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், ஜன.29 முதல் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் படி மக்கள் தங்கள் குறைகளை www.stalinani.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 9179091790 என்ற எண்ணுக்கு அழைத்தோ தெரிவிக்கலாம். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைத்ததும், மக்களின் குறைகள் முதல் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

100 நாட்களில் எப்படி குறைகள் தீர்க்கப்படும்? அதற்கான செயல்திட்டம் என்ன?

1. மனுக்கள் பெறுதல்:

“ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரச்னைகள் அடங்கிய மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுத் தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மேலும், இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; பிரத்தியேக இணையதளம் ( stalinani.com ) வாயிலாகவோ; 9171091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ, தங்கள் பிரச்சினைகளைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் முன்னிலையில் சீல்: ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும். ”பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் நானே சேகரித்து சீல் வைப்பேன்” என தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி அமைந்ததும் தனி துறை : தி.மு.க ஆட்சி அமைந்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை ஒன்று அமைக்கப்படும். மக்களிடம் பெறப்படும் புகார் மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு துறையாக அது செயல்படும்.

மாவட்ட வாரியாக புகார் மீது நடவடிக்கை : தொகுதி வாரியாக, கிராமங்கள் வாரியாக உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றப்பட்டும்.

100 நாட்களில் செயல்படுத்தபடும் : ஆட்சி அமைந்து முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

1 கோடி குடும்பங்களின் குறைதீர்ப்பு : கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு செய்ய தவறிய பிரச்சனைகளையெல்லாம் தி.மு.க அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும். இந்த கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றிக்கொடுக்கம் போது தமிழகத்தில், சுமார் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்.

தனது இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பு இல்லை என்றும் அது தனது வாக்குறுதி என்றும் தி.மு.க தலைவர் தெரிவித்தார். ”உங்கள் குறைகளை சொல்லுங்கள் நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொல்வதை செய்வான் இந்த ஸ்டாலின். செய்வதை மட்டுமே சொல்வான் இந்த ஸ்டாலின்.” என சூளுரைத்தார்.

Also Read: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!