Tamilnadu

“50 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பு”: கூகுள் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்த விவசாயி!

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோவை செல்லும் நெடுஞ் சாலை அருகே குந்தா பகுதியில் தேனாடு தோட்டம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில், 10க்கும் மேட்பட்ட சிறு விவசாயிகள் சுமார் 5 ஏக்கர்,10 ஏக்கர் என தேயிலை தோட்டம் வைத்துள்ளனர்.

வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இவர்கள் தேயிலை பறித்துக்கொண்டு வெளியே வர வசதியின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவந்துள்ளனர். இந்நிலையில், தேனாடு தோட்டத்தில் இருந்து தேயிலை வெளியே கொண்டு வர முடியாததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறு விவசாயியான ராஜகோபால், குந்தா மின் நிலைய மதகுகள் ஒட்டிய பகுதியில், கேட்டு ஒன்று இருப்பதை கண்டு கூகுள் உதவியுடன் அதுதொடர்பான புகை படங்களைத் தேடினார். அப்போது அது குறித்த விபரங்கள் கண்டு அதிர்ந்து போனார்.

அந்த கேட் சாலை, நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகவும் 100 மீட்டர் வரை தற்போது தார் சாலை இருப்பதாகவும் அதற்கு மேல் ஆங்கிலேயர் காலத்தில் தேனாடுதோட்டம் கிராமம் வரை 2 கிலோமீட்டர் தூரம் குதிரை சாலை இருந்ததாகவும், மேலும் தற்போது இந்த சாலை முழுவதும் தனியார் தோட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து சாலையே தெரியாத அளவிற்கு தேயிலை தோட்டம் போட்டு அழிந்துள்ளனர்.

மேலும் குந்தா மின் நிலையம் மற்றும் அணையை ஒட்டிய பகுதியில் சுமார் 40 ஏக்கர் வரை தனியார் ஆக்கிரமிப்பு செய்து தேயிலை தோட்டம் போட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த தகவல் எல்லாம் ஒன்றிணைந்து சென்னை, டெல்லி, தமிழ்நாடு மின்சார வாரியம் , மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களை சந்தித்து 4 வருடங்களாக தான் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் கோகுல் படங்கள் அத்தனையும் கொடுத்தார்.

இதுவரை தானும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பட்ட கஷ்டங்களை, அதிகாரிகள் கண்டுக் கொள்ளவே இல்லை என தெரிவித்தார். இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் இதுவரை தனக்கு இந்த தகவல் வரவில்லை எனவும், நான் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிப்பதாக உறுதியளித்தார்.

மேலும் குந்தா பகுதியில் இருந்த தாசில்தார் சரவணன் மற்றும் ஒரு சில அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ததுடன், புதியதாக குந்தா தாலூக்கா தாசில்தாராக மகேஸ்வரியை நியமித்தார். அவர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்கு சர்வே குழு உட்பட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் சென்று முதல் கட்டமாக கிராமத்திற்கு செல்லும் குதிரை சாலையை ஆக்கிரமிப்பு செய்து தனியார் தேயிலை தோட்டம் போட்டதை சர்வே செய்து, ஜே.சி.பி இயந்திரம் கொண்டு டீ செடிகள் வேரோடு பிடிங்கி அழிக்கப்பட்டது.

இது குறித்து தேனாடு தோட்டம் விவசாயி ராஜகோபால் கூறுகையில், “20 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரியத்தின் சுமார் 40 ஏக்கர் நிலத்தின் எல்லா ஆதாரங்களும் தன்னிடம் உள்ளது. அது அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அரசிடமும் இதற்கான ஆதாரம் உள்ளதாகவும், இங்குள்ள அதிகாரிகள் இதை கண்டுக் கொள்ளாமல், நிலம் அபகரித்துள்ளவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால், இந்த தகவல் வெளிவராமல் போய்விட்டது.

நான் கூகுள் வழியாக முயற்சிகள் மேற்கொண்டதால் எனக்கு இத்தனை ஆதாரங்கள் கிடைத்ததாகவும் அதைமாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்ததும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தை மீண்டும் தன் வசப்படுத்தம் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் இங்கு தண்ணீர் வசதிகள் அதிகளவு உள்ளதால், இந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பூங்கா அமைத்தால் அரசுக்கு வருவாய் கிட்டுவதுடன் சிலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

தற்போது சாலை வசதி அமைக்கப்பட்டால் என்னை போன்ற சிறு விவசாயிகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் மேலும் தேனாடுதோட்ட கிராம மக்களுக்கும் பள்ளிக்கு செல்லும் குழத்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்

Also Read: “25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்?