Tamilnadu
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19
மிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,32,415 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 62,619 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,56,40,385 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,34,740 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், கொரோனாவால் இன்று மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,195ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 642 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,17,520 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!