Tamilnadu
போலிஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை.. 15 மணிநேரத்தில் மர்ம கும்பலை பிடித்த தனிப்படை!
கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்துவிட்டு ரூபாய் 80 லட்சதை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது மற்றொரு சொகுசு காரில் போலிஸார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் அந்த பணத்தை சினிமா பாணியில் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நகையை பறிகொடுத்த நகைக்கடை வியாபாரியான சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் உடனடியாக புகாரளித்திருக்கிறார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலிஸார் நான்கு தனி படை அமைத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டோதோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலிஸ் உடை மற்றும் 10 செல்போண்களையும் பறிமுதல் செய்தனர் 15மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலிஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் பாராட்டியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!