Tamilnadu
நீலகிரியில் விதிமீறி செயல்பட்ட 30 தேயிலை தோட்ட தொழிற்சாலை.. நோட்டீஸ் விடுத்த தென்னிந்திய தேயிலை வாரியம்!
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேயிலை தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தென்னிந்திய தேயிலைக்கு வாரியத்துக்கு விலை குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீலகிரியில் உள்ள 43 தோட்ட தொழிற்சாலைகளில் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் தரமான பசுந்தேயிலை கொள்முதலின்மை, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் தேயிலை கழிவுகளை சேர்த்து வைத்தல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தனியாரிடமிருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்தல், பிற தொழிற்சாலைகளிடம் இருந்து கொள்முதல் செய்தது, சுகாதாரமின்மை, சட்ட ஆவணங்கள் பராமரிப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 30 தேயிலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேயிலை தொழிற்சாலைகளிடம் இருந்து சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாடு ஆணை மற்றும் தேயிலை கழிவு கட்டுப்பாடு ஆணையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!