Tamilnadu
“வாழ்வாதாரத்தை இழந்த கடற்கரை வியாபாரிகள்” : எடப்பாடி அரசைக் கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டம் !
திரைப்படங்கள் முதல் சென்னைக்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றானது மெரினா கடற்கரை. இங்கு வாரம் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்காக செல்வது வழக்கம். மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டுகள் என பலதரப்பட்ட சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா, ஊரடங்கு உத்தரவு என பல்வேறு பிரச்சினைகளில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். வியாபாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடற்கரையை அழகுபடுத்துதல் மீன் அங்காடி அமைத்தல் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பலவகை திட்டத்தின் கீழ் இங்கு உள்ள கடைகளை அகற்றும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடை வைத்து வந்த வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். அதனை தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அமர்விற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் அக்னி கோத்ரி தலைமையில், தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி மெரினா கடற்கரையில் 900 கடைகளை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
இரண்டாவது படிமத்தின் படி விண்ணப்ப செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கடைகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் 1,500 கடைகள் மாநகராட்சி அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றை 900 ஆக குறைத்தது மட்டுமின்றி அவற்றில் 40% கடைகளை வெளி நபருக்கு வழங்கும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி மாநகராட்சி சார்பில் 900 கடைகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இதில் முதல் படிவம் பல வருடமாக கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் மேலும் மற்றொரு படிவம் மனது புதிதாக கடைகள் விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி பல வருடமாக கடைகள் நடத்தி வரக்கூடிய பெரும்பாலானோர் ஆவணங்களில் தவறு உள்ளதாக கூறி, மாநகராட்சி சார்பில் அவர்களது பெயர் நீக்கப்பட்டு புதிதாக கடைகள் அமைப்பது போல் விண்ணப்பம் வழங்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இறந்ததாக கூறி மிகவும் வேதனையில் உள்ளனர் வியாபாரிகள்.
அதேபோல் இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்து மூன்று முறை விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு மாநகராட்சியால் அடையாள அட்டை பெற்ற பின்னர் தரவுகள் சரியில்லை எனக் கூறுவது மாநகராட்சி பாரபட்சம் காட்டுவதை போன்ற ஒரு செயலாக உள்ளதாகவும் வியாபாரி சங்க தலைவர் பிரகாஷ் தெரிவிக்கிறார்.
அதுமட்டுமின்றி, நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் படி, சென்னை மாநகராட்சி செயல்படவில்லை என்றும் மாறாக கடைகள் ஒதுக்கீட்டில் பெரும்பாலும் பாரபட்சம் காட்டி ஒதுக்கீடு செய்வதாகவும் வழக்கறிஞர் மது பிரகாஷ் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
1,500 கடைகளை போதாத நிலையில் 900 கடைகள் வழங்கப்படும் என தெரிவித்து, அதிலும் 40% கடைகள் வெளி நபர்களுக்கு வழங்குவதால் இங்கு பல வருடமாக வியாபாரம் செய்து வரும் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி 60% வழங்கக்கூடிய கடைகளிலும் மாநகராட்சி பாரபட்சம் காண்பித்து கடைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் வழக்கறிஞர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அயோத்தியா நகர் பகுதியில், மெரினா கடற்கரை மணல் பரப்பு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரை ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவில் பல வியாபாரிகள் கடைகளை இழந்து வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியலில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட கடற்கரை பரப்பு வியாபாரிகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களையும் முழக்கங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடன் மட்டுமே தமிழக அரசு பல திட்டங்களை செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆதாயம் தேடும் நோக்கத்திற்காக மட்டுமே அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!