Tamilnadu
பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி.. காட்டுக்குள் தூக்கி வீசப்பட்ட சிறுமி 27 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வட மாநில மக்களை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய தேயிலைத் தோட்டங்கள் உரிமையாளர்கள் அழைத்து வந்து பணியாற்ற வைத்து வருகின்றனர்.
அவ்வாறு கொலக்கம்பை தனியார் தேயிலை தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது இரு பெண் குழந்தை மனைவியுடன் வேலைக்காக நீலகிரி வந்துள்ளார். அவர் கொலக்கம்பை தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில்,
கடந்த 20.12.2020ம் தேதி அன்று 8 வயது பெண் குழந்தையை காணவில்லை. இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை லட்சுமணன் சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் லட்மணன், 23.12.2020 அன்று கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகார் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது வடமாநில இளைஞர் ஒருவரை காவல்துறையிர் அழைத்து சென்று விசாரணை செய்த நிலையில், விசாரணையில் அச்சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, சிறுமி கத்தியதால் பாயந்து பாலத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டு தான் வந்து விட்டதாக காவல்துறையினரிடம் வடமாநில இளைஞர் வாக்குமூலம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 27 நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள், ஈடுபட்டு வரும் நிலையில், கொலக்கம்பை வனப்பகுதி முழுவதும் சிறுமியை தேடும் பணி தொடங்கப்பட்டு தேயிலை தோட்டங்கள், ஆறு, பூட்டப்பட்ட வீடுகள்,வனப்பகுதியில் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் கிரேக் மோர் அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பாலடைந்த கிணற்றில் இருந்து, சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டது. இது குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறைந்த சம்பளத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியில் அமர்த்துவதால் இது போன்ற நபர்களை பணிக்கு அமர்த்துவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிராமவாசிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!