Tamilnadu
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிய உணவுக்கு காசு தராமல் இழுத்தடிக்கும் அதிமுக அரசு: ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை!
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால், உண்மையில் கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை முறையாக வழங்கவில்லை என்றும், உணவு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில், முதலமைச்சர் சொன்ன கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய ஊத்தாப்பம் ஒன்று என வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
வேறு சில பகுதிகளில் முட்டையும், பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் முதலமைச்சரின் கணக்கு, பொருந்தாக் கணக்காகவே உள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும் நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.300 கோடியை தமிழக அரசு தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், வசந்தபவன் ஓட்டல் உரிமையாளருமான எம்.ரவி கூறுகையில், “கொரோனா காலத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது.
தற்போதுவரை பல இடங்களில் உணவு விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நோயாளிகளுக்குஉணவு வழங்கியதில், தமிழக அரசு ஓட்டல் வியாபாரிகளுக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை. கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது.
குறிப்பாக சென்னையில் மட்டும் ரூ.60 கோடியும், தமிழகம் முழுவதும் ரூ.300 கோடியும் தர வேண்டியுள்ளது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகத் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஓட்டல் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால், ஓட்டல் அதிபர்கள் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!