Tamilnadu
“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அமைக்கப்படும்”: மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜிவ் காந்தி நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, திருமலைநகர் பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 197 மகளிருக்கு தையல் இயந்திரம் மற்றும் பொங்கல் பரிசுகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதேப்போல், டேலி பயிற்சி முடித்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு மடிக்கணினி, சான்றிதழ் மற்றும் பொங்கல் பரிசுகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி, தனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், கொளத்தூர் போல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவர் இந்த நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை, சாதனைகளை விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மகளிருக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என எல்லா தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரது சாதனை வாயிலாகத் தீர்த்து வைத்திருக்கிறார்.
ஐந்தாவது முறை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தேன். அப்போது பல நலத் திட்டங்கள் மூலம் மகளிருக்கு உதவிகள் செய்யப்பட்டது” என்றார்.
மேலும் பேசிய அவர், “மருத்துவக் கல்வியைப் பெற முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் பெயரில் பயிற்சி மையம் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்து, 2019 பிப்ரவரி மாதம் இந்த அரிய முயற்சியைத் தொடங்கினோம். அப்படித் தொடங்கப்பட்ட அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்ற பலர், இன்று வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.
எதிர்க்கட்சியாக இருக்கும் இந்த நேரத்திலும் நாம் இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால், உறுதியாகச் சொல்கிறேன்; நிச்சயமாகச் சொல்கிறேன்; ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு 234 தொகுதிகளிலும் இதே போன்ற பயிற்சி மையங்களை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!