Tamilnadu
பொள்ளாச்சி கொடூரம்: “கட்சி ஆட்களை காப்பாற்ற பெண்களை பழிவாங்குகிறது எடப்பாடி அரசு” - கனிமொழி எம்.பி சாடல்!
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி எம்.பி., “பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என தளபதி எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறை பணிந்தது. இதை தடுத்தால் வெகுண்டு எழுவோம்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே என தொடர்பு இருக்குனு பாருங்க. அதிமுக அமைச்சர், துணை சபாநாயகர், நிர்வாகிகளுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என புகைப்படங்களை காட்டினார். இத்தனையும் தாண்டி பல பேரை காப்பாற்றவே அருளானந்தத்தை காப்பாற்ற துடிகின்றனர்.
எந்த அளவிற்கு இந்த விசாரணையை தடுத்து கொண்டிருக்கிறார்கள். இதை தட்டி கேட்கவில்லை என்றால், பெண்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நாதியில்லை என்ற நினைத்து விடுவார்கள்.
இந்த சூழலை உருவாக்கி விடக்கூடாது. எனவே தான், தளபதி இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. தனது கட்சிகாரர்களை பாதுகாக்க வேண்டும் என பெண்களை பழிவாங்கி கொண்டிருக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் விடைக்க வேண்டும். அதனால் தான் தனி நீதிமன்றம் உருவாக்குவோம் என தளபதி கூறினார். மேட்டுப்பாளையம் நடூரில் 17 பேர் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? ஜாதியின் பெயரால், மதத்தில் பெயரில் ஆட்சி நடைபெறுகின்றது.
தான் விவசாயி என்று கூறும் பழனிசாமி, டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அதை எதிர்த்து பேசியவர்தான் பழனிச்சாமி.
எந்த வழக்குகள் போட்டாலும் நாங்கள் நீதி விசாரணைக்காக போராடுவோம். யாராக இருந்தாலும் இந்த வழக்கில் தொடர்புடையஅவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் வர உள்ளது. அனைவரும். இணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம், அவர்கள் யாராக இருந்தாலு்ம் , நீதியின் முன்பு சட்டத்தின் முன்பு கொண்டு வருவோம்.” என பேசியுள்ளார்.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!