Tamilnadu

ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்காத தரமற்ற பாலம்.. பழனிசாமியின் உறவினரே டெண்டர் எடுத்து கட்டியது அம்பலம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் தமிழக அரசால் புதிதாக கட்டப்பட்ட பாலம் குறுகிய நாட்களில் பெயர்ந்து விழுந்தது தாராபுரம் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசால் பாலம் கட்டப்பட்டு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு நேர்த்தியாகக் கட்டியது போல காட்சியளித்தாலும் நேற்று பெய்த மழைக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பெயர்ந்து சாலையில் விழுந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் மக்கள் யாரும் செல்லாததால் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். பல கோடி செலவு செய்து கட்டப்பட்ட இந்தப் பாலம், அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் முடிந்துவிடும்போல தெரிகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரே அந்த பாலத்தின் டெண்டரை எடுத்துக் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. பாலத்தை டெண்டர் எடுத்து கட்டிய நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: “வேனில் ஏறி ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் துப்பில்லாத முதலமைச்சர்” - எடப்பாடியை சரமாரியாக தாக்கிய ஆ.ராசா!