Tamilnadu
தமிழகத்தில் 2020ல் போதை பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரிப்பு : எடப்பாடி ஆட்சியில் சீர்கெட்டுப்போன தமிழகம்!
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசால் படிக்கப்போகும் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு இல்லை. பணியாற்றும் இடங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இதில் வன்முறைக்களுக்கு மிக முக்கிய காரணமாக விளக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. குறிப்பாக, குட்கா, பான் மசாலா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், அதன் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளிலும் இருந்தும் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தமிழகத்தில் 2020ல் போதை பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2020 ஆண்டில் 23 வழக்குகளில் ரூ.14.20 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், இளம் பெண், மலேசியா மற்றும் வெளிமாநிலங்களை சோ்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனா்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தல் என்பது முந்தைய ஆண்டுகளில் குறைவாகவே இருந்தது. கடந்த 2018 ஆண்டில் 9 வழக்குகளில் சுமாா் ரூ.3.7 கோடியும், 2019 ஆம் ஆண்டில் 13 வழக்குகளில் ரூ.7.19 கோடியும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் 2020 கொரோனா வைரஸ் ஊரடங்கு ஆண்டில் அது 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சீா்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ்சால் நாடே முடங்கிக் கிடந்தாலும் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருட்கள் கடத்தல்கள் பெருமளவு அதிகரித்து விட்டன.
சா்வதேச பயணிகள் விமான சேவைகள் இல்லாத இந்த காலக்கட்டத்திலும், சரக்கு விமானங்களில் போதைப் பொருட்கள் வெளி நாடுகளுக்கு செல்கின்றன. அதுப்போல் வெளிநாடுகளில் இருந்து புதிய வகையிலான போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களடங்கிய பல பாா்சல்களில் "மருத்துவ பொருட்கள் அவசரம்" என்று குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது. அதுவும் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இல்லாமல் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்ட 5 மாத காலத்தில் அதிகமான போதை பொருட்கள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த போதை ஸ்டாம்புகள் முதல் முறையாக 2020 ஆண்டில் நெதா்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது. வெளிநாடுகளில் பிரபலமான போதை மாத்திரைகள் பெருமளவு ஜொ்மன், நெதா்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து தாராளமாக கொரியா் பாா்சல்களில் சென்னை வந்தன.
அதைப்போல் உயா் ரக கஞ்சா பவுடா் மற்றும் மாத்திரைகள் எத்தியோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வந்தன. மேலும் சென்னையில் இருந்து மெத்தோகுயிலோன், ஒப்பியம், பெத்திடோபெடிரின். சூடாபெட்ரீன் என்ற வகையிலான போதை பவுடா்கள், போதை மாத்திரைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
இந்த போதைப்பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களில் பொறியாளா்கள், மாணவா்கள் போன்றவா்களும் அடங்குவாா்கள். அதைப்போல் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா, கா்நாடகா மாநிலங்களை சோ்ந்தவா்களும், மலேசியா நாட்டு குடியுரிமை பெற்றவரும் கைது செய்யப்பட்டு உள்ளனா்.
சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தும் முக்கிய முனையமாக மாறி உள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களை சோ்ந்தவா்கள் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.
இதற்கு காரணம் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகியுள்ளதால், விற்பனையும் அதிகமாக இருப்பதாகவும், மேலும் கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுங்க இலாகா அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து போதை பொருட்கள் கடத்துவதை முழுமையாக தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள் வெளிநாட்டு ஆன்-லைனில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை கொரியா் தபால் முலம் பெற்ற சம்பவங்களே அதிகமாக இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!