Tamilnadu
சென்னையில் பதுக்கப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஆந்திர கஞ்சா வியாபாரிக்கு தனிப்படை போலிஸ் வலைவீச்சு!
சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த மேலும் ஒரு கஞ்சா வியாபாரியை கைது செய்த போலிஸார், கஞ்சாவை அனுப்பி வைத்த ஆந்திர மாநில கஞ்சா வியாபாரிக்கு வலைவீசியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கீழ்பாக்கம் சென்று சந்தேகத்திற்கு இடமாக அங்கு சுற்றி திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் நெற்குன்றம், வடுவை அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் தனிப்படை போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சசிகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் கோபால் என்பவரிடமிருந்து கஞ்சாவை பெற்று சென்னையில் கடத்திக் கொண்டு வந்து பிரபல கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தங்கையா என்பவருக்கு கஞ்சா விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள காந்தி சிலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தங்கையாவை போலீசார் கைது செய்தனர்.
தங்கையா விடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் அதேபோல் கஞ்சா தேவையான தெரியப்படுத்து வர்களுக்கு தனது காரிலேயே கொண்டு சென்று கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பிரபா கஞ்சா வியாபாரி தங்களையாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆதம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் மதுரவாயல் மற்றும் ஆலம்பாக்கம் பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ஆலம்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 100 கிலோ கஞ்சா போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (31) என்பவரை கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு டாட்டா ஏஸ் நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா அனுப்பிய கோபால் என்பவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!