Tamilnadu

சென்னையின் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்தது என நேரில் விவாதிக்க நான் தயார். முதல்வர் தயாரா? - திமுக MLA

தமிழகத்தில் ஆட்சேபனை இல்லா நிலங்களில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தி.மு.க சார்பில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம் எல் ஏ வாகை சந்திரசேகர், ஆர் எஸ் ரமேஷ், மற்றும் பகுதி செயலாளர் கண்ணன் ராசா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய எம்.எல்.ஏ மா.சுப்ரமணியம் தி.மு.க சென்னை மாநகராட்சிக்கு என்னவெல்லாம் செய்தது என்று கோவை விமான நிலையத்தில் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக சென்னைக்கு என்ன செய்தது என்று தலைமைச் செயலகத்திற்கே வந்து விவாதம் நடத்த நான் தயார். முதல்வர் தயாரா?

முதல்வர் தயார் என்றால் தி.மு.க என்னவெல்லாம் செய்தது என நேரடியாக விவாதிக்கிறேன். தலைமைச்செயலகத்திற்கு வருகிறேன். இல்லை பசுமை வழிச்சாலை இல்லத்திற்கு வருகிறேன். அதுவும் வேண்டாம் என்றால் எடப்பாடியில் உள்ள பழனிச்சாமியின் இலத்திற்கே வருகிறேன் எனக்கூறிய மா.சுப்ரமணியம், மிண்ட் , காக்கரின் பாலம் அதிமுக கட்டியது என்கிறார் முதல்வர். ஆனால், அதற்கான பணிகளை தொடங்கி 70% பணிகளை முடித்தது திமுக ஆட்சியில் தான். முதல்வருக்கு ஒன்று கூறுகிறேன், கரு யாரால் உருவானதோ அவர்கள்தான் பெயர் வைக்க வேண்டும்.

நான் இருக்கும் இல்லம் குறித்த தவறான தகவலை முதல்வர் கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கைகளை எடுக்க இதுவரை இரண்டு ஐ.ஏ.எஸ் மாற்றிவிட்டார். ஆனால் இதுவரை எதுவும் செய்யமுடிவில்லை. ஒரு எடப்பாடி இல்லை, ஒரு லட்சம் எடப்பாடி வந்தாலும் என் கால் நகத்தை கூட அசைக்க முடியாது. என பேசினார். எடப்பாடிக்கு திராணி இருந்தால் தன் பினாமியின் பெயரில் வாங்கியிருக்கும் 19 வீடுகளை பற்றி விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இன்னும் 3,4 அமாவாசைதான் எடப்பாடியின் ஆட்சிக் காலம். ரேசன் கடை மூலம் 2500ரூ கொடுப்பதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளோம். அதற்கு இன்று நோட்டீஸ் சென்றுள்ளது.

இனியும் அது தொடர்ந்தால் அந்தக் கட்சியே தடை செய்யப்படும் நிலை வரும். ரேசன் கடை மூலம் 2500ரூ கொடுப்பதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளோம் அதற்கு இன்று நோட்டீஸ் சென்றுள்ளது. இனி அது தொடர்ந்தால் அந்தக் கட்சியே தடை செய்யப்படும் நிலைவரும்.

திமுகவை பார்த்து குடும்ப அரசியல் என்கிறீர்களே., எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், மூத்த அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் அமைச்சர் ஆனாரா? பன்ரூட்டியார் அமைச்சர் ஆனாரா? இல்லை ஆர்.எம்.வீ அமைச்சர் ஆனாரா? அவர் மனைவி ஜானகிதானே முதல்வர் ஆனார்!

அவருக்குப் பிறகு மூத்த அமைச்சர் பொன்னையன் முதல்வர் ஆனாரா? வளர்மதி ஆனாரா? எம்.ஜி.ஆரின் உடன் நடித்த நடிகையை தானே முதல்வர் ஆக்கினீர்கள்.” என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.

Also Read: 6 டெண்டர்களில் ரூ.6,133 கோடி ஊழல்.. பினாமி பெயரில் சொத்துகள்.. எடப்பாடி பழனிசாமியை சாடிய ஆர்.எஸ்.பாரதி!