Tamilnadu

“திமுகவின் கிராம சபை கூட்டத்துக்கு தடை விதித்தது தோல்வி பயமே காரணம்” - எடப்பாடி அரசை சாடிய வேல்முருகன்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் விவசாயிகளை பட்டினிக்கு கொண்டு செல்லக்கூடிய சட்டம். பெட்ரோல் , சிலிண்டர் விலை உயர்வு அதிகரித்துள்ளது இதுகுறித்து மத்திய அரசு பேசுவதில்லை.

Also Read: “தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” : வேல்முருகன் சாடல்!

அதேபோல், வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அம்பானி அதானி ஆகியோருக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது.

மீண்டும் எடப்பாடி ஆட்சி வராது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். அதேபோல், அதிமுகவின் ஆட்சி கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்கின்ற தோல்வி பயம் காரணமாகதான் திமுக சார்பில் நடத்தப்பட்டு வந்த கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் தடை விதித்துள்ளது.

பாஜகவை சேர்ந்தவர்கள் எடப்பாடி ஆட்சியை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். ஆனால் அதிமுகவினர் அவர்களுடன் இணைந்து சுயமரியாதை விட்டு ஆட்சி நடத்துகிறது என்று வேல்முருகன் சாடியுள்ளார்.

Also Read: “அரசு பணிகளில் வட‘இந்தி’யரை திணிக்காதே” வேல்முருகன் பேட்டி - ட்ரெண்டாகும் #தமிழகவேலைதமிழர்களின்உரிமை